திருமங்கலத்தில் பழமை வாய்ந்த இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

திருமங்கலத்தில் பழமை வாய்ந்த இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா

 

IMG_20250313_080926_034

திருமங்கலத்தில் பழமை வாய்ந்த இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.



மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


திருமங்கலத்தில் அருள்மிகு ஸ்ரீ காட்டு மாரியம்மன் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது இத்திருக்கோவில் கும்பாபிஷேக விழாவினையொட்டி கடந்த 10ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. அனுக்கை பூஜை, விக்னேஸ்வர பூஜை,  தனபூஜை, கோபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று 11ம் தேதி இரண்டாம்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி , உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூன்றாம் காலயாகசாலை பூஜை நடைபெற்றது.  இன்று மார்ச் 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மங்கல இசை, தேவாரதிருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை , நான்காம்கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து  பல்வேறு பகுதிகளில் உள்ள நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணியநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 6.15 மணியளவில் காட்டுமாரியம்மன் மற்றும் கோபுரவிமானத்திற்கும் ,காலபைரவர், வராஹி, மீனாட்சியம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்டவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தினை தூத்துக்குடியை சேர்ந்த ஹரிசங்கர்பட்டர் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடத்திவைத்தனர். கும்பாபிஷேகத்தில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஏராளமானோர்  கலந்து கொண்டனர். தொடர்ந்து காட்டுமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் ராஜலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் மோகன் செய்திருந்தனர்கோவில் அர்ச்சகர் வெங்கடேஷ்சிவம் மற்றும் சங்கரநாராயணன் சீனு திருச்செந்தூர் தந்திரி ஐயப்ப பட்டர் உள்ளிட்டோர் சிறப்பு பூஜை செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad