மதுரை மேலூரில் திருடு போன டாட்டா ஏசி வாகனம் உளுந்தூர்பேட்டை போலீசார் கண்டுபிடித்தனர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை இரண்டு நபர்கள் திருடிக் கொண்டு சென்னைக்கு ஓட்டு செல்லும் பொழுது உளுந்தூர்பேட்டை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மதுரை மேலூரை சேர்ந்தவர் ராஜுவ் ஓட்டுனரான இவர் வழக்கம் போல் நேற்று இரவு டாட்டா ஏசி வாகனம் ஓட்டி முடித்த பின்பு தனது வீட்டில் முன்பாக டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு தூங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தூங்கி எழுந்து பார்த்தபொழுது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜுவ் உடனடியாக மதுரை மேலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டாட்டா ஏசி வாகனம் திருடு போனது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் தேடி வந்தனர்
மேலும் அருகில் உள்ள மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து டாட்டா ஏசி வாகனத்திலிருந்து ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்காணித்து வந்த போது டாட்டா ஏசி வாகனம் இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை வழியாக டாட்டா ஏசி வாகனம் சென்றது அறிந்த மேலூர் போலீசார் உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
அதன் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படியாக வேகமாக வந்த ஒரு டாட்டா ஏசி வாகனத்தை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்த பொழுது டாட்டா ஏசி வாகனம் ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் மதுரை மேலூரில் திருடுபோன டாட்டா ஏசி வாகனத்தின் பதிவின் இருந்ததால் டாட்டா ஏசி வாகனம் பறிமுதல் செய்ததோடு வாகனத்தை ஓட்டி வந்த பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர்
அப்பொழுது வெங்கடேசன் மற்றும் இவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் ஆகிய இருவரும் மதுரை மேலூர் இருந்து டாட்டா ஏசி வாகனத்தை திருடிக் கொண்டு சென்னை சென்றது தெரியவந்தது இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் மதுரை மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக