உளுந்தூர்பேட்டை டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் அறக்கட்டளையின் சார்பில் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இயங்கி வரும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள திமிரட்டி பாளையம் கிராமத்தில் வசிக்கும் தாய், தந்தை இழந்த மூன்று குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, நோட்டு, புத்தகப் பை, பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், மற்றும் மிதியடி மற்றும் சாப்பாட்டிற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் & தலைவர் ஆ.முருகன் மற்றும் நிதி உதவி வழங்கிய முகில் வேந்தன் அவர்களால் குழந்தைகளுக்கு இன்று வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக