நெல்லியாளம் தேயிலை தோட்ட நலவாழ்வு மையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர கோரிக்கை நெல்லியாளம் நகராட்சி மன்றத்தின் 3 வது வார்டு உறுப்பினர் நாகராஜ் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது
பந்தலூர் அருகே நெல்லியாளம் தேயிலை தோட்ட கழகத்தில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். நெல்லியாளம் சரகம் எண் 1ல் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது சுமார் 8 கிலோ மீட்டர் துாரமுள்ள பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனைக்கு செல்லும் முன்பு முதலுதவி சிகிச்சை கிடைத்தால் கோல்டன் ஹவர் எனப்படும் உயிர்காக்கும் வாய்ப்பு பெறுவார்கள். அதற்க்கு நெல்லியாளம் தேயிலை தோட்டம் சரகம் 1 இல் உள்ள நலவாழ்வு மையம் அமைக்க பட்டுள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் எங்களது பகுதி காட்டு விலங்குகள் நிறைந்த பகுதியாகும். தொழிலாளிகளான நாங்கள் காலை 7 மணிக்கு வேலைக்கு சென்றால் மாலை 6 மணிக்குதான் வீடு திரும்பும் நிலை உள்ளது. இடைப்பட்ட நேரத்தில் எங்களுக்கு ஏற்படும் சிறு சிறு காயம் உள்ளிட்டவைகளுக்கு மருந்துகள் வாங்கவும் இரவு நேரங்களில் முதலுதவி சிகிச்சை பெறவும் நலவாழ்வு மையம் அவசியம் ஆகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள நலவாழ்வு மையம் தற்போது எஸ்டேட் சார்பில் வழங்கிய பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் பழுதடைந்து உரிய பாதுகாப்பு இன்றி உள்ளதால் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உரிய சிகிச்சை பெற இயலாமல் சிரம்மப்படும் சூழல் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள நலவாழ்வு மையம் புதுப்பித்து உரிய வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக