சரிந்து விழுந்த ரோட்டரி கிளப் பேருந்து நிலையம் உயிர் தப்பிய பள்ளி மாணவ மாணவிகள்
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து அவலாஞ்சி செல்லும் நெடுஞ்சாலையில் வி பி என் என்னும் பகுதியில் நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த ரோட்டரி கிளப் பேருந்து நிலையம் பள்ளி மாணவர்களுக்கு நிழல் குடையாக இருந்து வந்தது. இது சரியும் நிலையில் உள்ளபோது நமது தமிழக குரல் செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம் ரோட்டரி கிளப் எந்த ஒரு முடிவுகளும் எடுக்கவில்லை. பின்னர் நேற்றைய தினம் இந்த பேருந்து நிலையம் ஆனது சரிந்து விழுந்தது பேருந்து நிலையம் சரிந்து விழும்போது இருசக்கர வாகனம் மட்டும் உள்ளே இருந்து இரு சக்கர வாகனம் மட்டுமே பாதிப்பு அடைந்தது. பள்ளி மாணவ மாணவிகள் யாரும் நிழற்குடை அருகில் இல்லை என்பதால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை இதனை உடனே ரோட்டரி கிளப் நிறுவனம் சரி செய்து பேருந்து நிலையத்தை புதுப்பித்து தந்து மாணவ மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சரி செய்து தருமாறு ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக