புதுமந்து ஹட்டி அருள்மிகு ஶ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் திருவிழா அழைப்பிதழ். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

புதுமந்து ஹட்டி அருள்மிகு ஶ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் திருவிழா அழைப்பிதழ்.

 

IMG-20250307-WA0092

புதுமந்து ஹட்டி  அருள்மிகு ஶ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் திருவிழா அழைப்பிதழ்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி புதுமந்து ஹட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் திருவிழா மார்ச் 11,12,13 செவ்வாய்,புதன், வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. மார்ச் 11 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 12 ல் ஐய்யனின் பந்தம் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலம் மற்றும் மார்ச் 13 ல் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பக்தி பஜனைபாடல் அருள்வாக்கு பாரம்பரிய நடனம் நடைபெறுகிறது. சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு ஐய்யனின் அருள்பெற்று செல்லுமாறு புதுமந்து ஹட்டி தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad