மதுரை அவனியாபுரம் ஈச்சனோடை அருகே பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்ற சம்பவம் -இருவர் கைது போலீசார் விசாரணை.
நகைக்காக வயதான பெண் கொலை செய்யப்பட்டார் என முதல் கட்ட தகவல்
கடந்த 4ம் தேதி
மதுரை புறநகர் பகுதியான விமான நிலையம் செல்லும் சாலை - அவனியாபுரம் சந்திப்பு அருகே ஈச்சனேரி பகுதியில் கோணி சாக்கு மூட்டையில் இருந்து அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
பெண் ஒருவரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி அந்தப் பகுதியில் தூக்கி வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் பெருங்குடி போலீசார் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள், காணாமல் போனவர்கள் விபரம் போன்றவை வைத்து விசாரணையை தொடங்கினார்.
இந்த நிலையில் தான் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த இந்திராணி (வயது 70) இவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் எனவும் இவரை காணவில்லை என கடந்த 20 ஆம் தேதி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சடலம் மீட்கப்பட்டதோ மார்ச் 4 கிட்டத்தட்ட 13 நாட்களாக உடல் சாக்கு மூட்டையில் கட்டி அந்தப் பகுதியில் கிடந்ததாக தெரிகிறது.
மேலும் போலீசார் அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்து விசாரித்த போது வில்லாபுரம் மற்றும் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சந்தேகம் படும்படியான சந்திரசேகர் ( வயது 50 )அமர்நாத் (வயது 38 )இருவரை பெருங்குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் முதல் கட்ட தகவலாக நகைக்காக கொலை செய்யப்பட்டதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேற்கொண்டு பெருங்குடி போலீசார் விசாரணையில் இந்திராணி தனது கணவரை விட்டு பிரிந்து ஐந்தாண்டுகளாக தனியாக வசித்து வருவதாகவும் வயதானவர் என்பதால் அவருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பது போன்ற சிறு சிறு வேலைகளை சந்திரசேகர் செய்துவந்துள்ளார் இந்நிலையில் இந்திராணி வைத்திருந்த 16 பவுன் நகையை சந்திரசேகர் எடுத்துள்ளதாக தெரிகிறது அதனை எடுத்து ஏற்பட்ட தகராறில் இந்திராணியை தலையில் தாக்கி கொலை செய்து பின்பு அவர் நண்பர் அமர்நாத் மூலம் சைக்கிள் மூட்டையாக கட்டி புறநகர் பகுதியான அவனியாபுரம் ஈச்சனோடை பகுதியில் வீசியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை காவல் ஆய்வாளர் சரவணன் சந்திரசேகர் மற்றும் அமர்நாத்தை கைது செய்து வழக்கு பதிவு செய்துவிசாரணை செய்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக