ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளின் கல்வித் திருவிழா மற்றும் கலை இலக்கிய விழா!
பேரணாம்பட்டு, மார்ச் 29 -
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டாரம் பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளிக் குழந்தைகளின் கல்வித் திருவிழா மற்றும் கலை இலக்கிய விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.பேர்ணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர்கள் .கோ.சம்பத் குமார், .ச.பீ.வடிவேலு ஆகியோர் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்தனர்
பள்ளித் தலைமை ஆசிரியர் பொன் வள்ளுவன் ஒருங்கிணைந்து நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட குடியாத்தம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் .து.இராவிந்திரன் அவர்கள் மாணவர்களை வாழ்த்தி பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி காவல் துறை அவசர உதவி எண், குழந்தைகள் பாதுகாப்பு எண்கள், தலைகவசம் போடுவதன் அவசியம் குறித்து பேசினார்.தானும் அரசு பள்ளியில் +2 வரை படித்து தான் இன்றைக்கு காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர் களும் நன்கு படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் து.இரவிந் திரன் அவர்கள் பேசினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சே.பானு, சு.ஸ்டெல்லாஹேமாபாய்,சி.கலைவாணி, ஆ.பிரேம செல்வகுமாரி சிறப்பு ஆசிரியர் ரம்யா மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் இணைந்து செய்திருந்தனர். நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிகழ்வுகளை காண ஆர்வத்துடன் பங்கேற்றனர் நிகழ்வில் பள்ளியின் கொடையாளர் .வெ.சிட்டிபாபு ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஜாமன்ரி பாக்ஸ் பெற்று வழங்கினார்.கொடையாளர் .கோ.செல்வக்குமார் அவர்களும் நிகழ்வில் பங்கேற்று தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத் திற்கு உதவுவதாக தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக