ஆபத்தை ஏற்படுத்தும் வளைவில் வேகத்தடை அமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

ஆபத்தை ஏற்படுத்தும் வளைவில் வேகத்தடை அமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!


குடியாத்தம் , மார்ச் 13 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றின் வலது கரையோரம் பொதுப்பணி மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் நீர்வளத்துறை மாநில நிதியின் கீழ் சுமார் 30.19 கோடி மதிப்பீட்டில் இந்திரா நகர் பகுதியில் இருந்து பெரும்பாடி வரை சாலை அமைக்கும் பணி மற்றும் கவுண்டன்யா குறுக்கே சுமார் 13.7 கோடி மதிப்பீட்டில் தரை பாலம் கட்டப்பட்டு உள்ளது
தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் காமராஜர் பாலத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது
இந்த நிலையில் பாவோடும் தோப்பு அருகே எஸ் வடிவில் பார்வைகுறைவான அபாயமான வளைவு இரண்டு இடங்களில் உள்ளது இதனால் டூவீலர் ஆட்டோ கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக வேகமாக வந்து திரும்பும் போது எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில்  விபத்துக்கள்  ஏற்பட்டு வருகிறது .மேலும் நேதாஜி சவுக்கு முதல் கங்கை அம்மன் தரை பாலம் செல்வதற்கும் லட்சுமி திரையரங்கம் முதல் பெரும்பாடி கூட்ரோடு வரை செல்லும் நான்கு முனை சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் வருவதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது
இது சம்பந்தமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம்  பகுதிக்கு  வருகை தந்த
மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா
சுப்புலட்சுமி  அவர்களிடம் இடம் 29 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் அவர்கள் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி மனு அளித்தார் இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள நான்கு முறை சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad