குடியாத்தம் , மார்ச் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் அன்பு உலகம் மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பொது மருத்துவ முகாம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தாழையாத்தம் ஊராட்சி வடக்கு பட்டறை கிராமத்தில் இலவச கண் மருத்துவம் பல் மருத்துவம் பொது மருத்துவம் முகாம் இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கம் தலைவர் சி கண்ணன் தலைமை தாங்கினார்
முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சத்தியமூர்த்தி தொடக்வுரை ஆற்றினார்
அன்பு உலகம் நிறுவனர் பிரான்சிஸ் மாறன் வரவேற்புரை நிகழ்த்தினார்
மருத்துவ முகாமில் கண்ணில் குறைபாடு நீர் வடிதல் மாறுகண் பிறவில்லையே கண் புரை கண் எரிச்சல் விபத்தினால் கருவிழி பாதிப்பு உள்ளவர்கள் சொத்தை பல் உள்ளவர்கள் பல் வலி பல் வீக்கம் உள்ளவர்கள் மூட்டு வலி கை கால் வலி மார்பு சளி இருமல் மூலம் பெண்களுக் கான மாதவிடாய் பிரச்சனை வெள்ளைப்படுதல் இடுப்பு வலி கை கால் வலி ஆஸ்துமா அலர்ஜி சைனஸ் மார்பு சளி இரும்பல் மூச்சில் தும்மல் மூக்கில் நீர் வடிதல் ஆகியவருக்கு சிகிச்சை அளித்து இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மருத்துவப் பணி இயக்குனர் பிஎல் என் பாபு ஆர்வி ஹரிகிருஷ்ணன் டி எஸ் ரவிச்சந்திரன் கே சந்திரன் வழக்கறிஞர் எஸ் பாண்டியன் பெரிய கோடிஸ்வரன் சுரேஷ் இதில் மருத்துவர்கள் டாக்டர் எஸ் சசிரேகா பேட்டரி எஸ் பி அபிநயா
டாக்டர் அபிராமி ஆகியோர் நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்கள்
பாலாறு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக