கன்னியாகுமரி மாவட்ட,எஸ்.பி. ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

கன்னியாகுமரி மாவட்ட,எஸ்.பி. ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டு

IMG-20250310-WA0081

கன்னியாகுமரி மாவட்ட,எஸ்.பி. ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டு


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டாலின் அவர்களின் வருகைக்கு பின் குமரி மாவட்டத்தில் வழக்குகள் வேகம் எடுப்பதை குமரி மாவட்டத்தில் நடக்கும் விவகாரங்களை உற்று நோக்குபவர்கள் புரிந்திருப்பார்கள்.   கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருவட்டாரில் காணாமல் போன மாணவிகளை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்தது, நாகர்கோவிலில் மளிகை கடை ஊழியரை நேற்று முன்தினம் கொலை செய்த நபரை பிடித்தது, குற்றவாளியை கைது செய்யும்போது தப்பி ஓடியாதால் கை கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி. இன்னும் பல விஷயங்களில் எஸ்பி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,


அதே போல் இரவு 11 மணிக்கு பின் அதிரடி படையுடன் சாலையில் ரோந்து செல்கிறார், தேவை இல்லாமல் கூடும் கூட்டத்தை கலைந்து போக சொல்கிறார். இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக குற்றவாளிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும், மற்றும் தேவைகளுக்கு வெளியில் வருபவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.குமரி மாவட்டத்தில் நாகராஜன் என்ற ஆட்சியர் இருந்தார் - அவர் திடீர் என்று சைக்கிள்,  டூ வீலர் என ஆய்வு செய்து பலரை அதிர்ச்சி அடைய வைத்து விடுவார், அவரின் செயல்பாடுகளுடன் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் ஒத்து போகிறது என்றே சொல்லலாம். 


பார்க்கலாம் மாவட்ட எஸ்பியின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். வேட்டையன் என்ற பட்டத்தை குமரி மாவட்ட மக்களின் சார்பாக பெற்று விடுவாரோ?


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad