ராதாபுரம் - பாப்பான்குளம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

ராதாபுரம் - பாப்பான்குளம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழா.

பாப்பான்குளம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, வைரவிழா மலர் வெளியிடப்பட்டது.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வைரவிழா, பள்ளி ஆண்டு விழா , புரவலர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும்விழா கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துராஜ் தலைமை வகித்து ஆண்டு மலர் நூலை வெளியிட்டார். ராதாபுரம் வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 

தலைமை ஆசிரியை தமிழ் முருகு செல்வி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நடப்பாண்டு கல்வியாண்டில் கல்வி பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ராதாபுரம் முன்னாள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அரவிந்தன், பஞ். துணைத் தலைவர் சபாபதி, ராதாபுரம் வக்கீல் சங்க முன்னாள் செயலாளர் இசக்கியப்பன், பரிசு பொருட்கள் வழங்கிய ஆசிரியர் ஆறுமுகம், பாப்பான்குளம் கிராம கமிட்டி தலைவர் ஐயப்பன், வார்டு கவுன்சிலர் பாலன், மகாதேவன்குளம் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் நம்பித்துரை, 

உதயத்தூர் ஆனந்தா நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சண்முகசுந்தரம், அப்புவிளை அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாசன், தெற்கு கும்பிகுளம் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் ஜோசப் பிரின்ஸ்டன், சமூக ஆர்வலர் ராதை காமராஜ் உட்பட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் வைகுண்டராஜா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad