இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பதவியேற்பு.
இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த அபினவ்குமார், ஐபிஎஸ்., மதுரை சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார் இதனையடுத்து திருநெல்வேலி சரக டிஐஜியாக, பணியாற்றி வந்த மூர்த்தி ஐபிஎஸ்., இராமநாதபுரம் சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று 31.03.2025 இராமநாதபுரம் சரக காவல்துறை புதிய டிஐஜியாக மூர்த்தி, ஐபிஎஸ்., பொறுப்பேற்றுக் கொண்டார்.பின்னர் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக வருகை தந்த அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக