சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (30). இவரது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி தனது மனைவி சரண்யா உடன் ஜான் காரில் சேலத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜானை இரண்டு கார்களில் 10-க்கும் மரேற்பட்ட கும்பல் பின் தொடர்ந்து வந்தது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ஜானின் காரை வழிமறித்த அந்த கும்பல் அவரை காருக்குள் வைத்தே சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த படுகொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கொலை கும்பலைச் சேர்ந்த சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். மேலும் வெட்டுக்காயம் அடைந்த கொலை கும்பலைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக