இந்நிகழ்ச்சியில் வனவர் நாகராஜ், வன காவலர் ராம் ப்ரீத்தி, வனப்பார்வையாளர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பறவைகள் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குனர் ஜான் சாமுவேல், ஒபெத், பென்கர், அபிமன்யூ , திருமறையூர் வாலிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட கணக்கெடுக்கும் பணி காலை 8:30 மணி வரை நடைபெற்றது.
இக்கணக்கெடுப்பில் நத்தை குத்தி நாரை, பாம்பு கழுத்து நாரை, செங்கால் நாரை, நீர் காகம், சம்புக் கோழி, நாம கோழி மற்றும் பலவித தண்ணீர் வாழ்த்துக்கள் போன்றவைகள் கண்டறியப்பட்டு கணக்கிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் வனவர் நாகராஜ் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக