வேலூர், மார்ச் 5-
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேலூர் கிளை மற்றும் வேலூர் வாசிப்பு இயக்கம் சார்பில் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை சபிதாபாய் , வேலூர் கிளை அறிவியல் இயக்கம் மற்றும் வேலூர் வாசிப்பு இயக்கத்தின் செயலாளர் முத்து சிலுப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அறிவியல் ஆசிரியை செல்வகுமாரி அவர்கள் தேசிய அறிவியல் நாள் குறித்து அறிமுகம் செய்து வரவேற்புரை ஆற்றினார். எனக்கு பிடித்த விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ரித்திகா, வனிதா, ஆஃபிபா, பிருந்தா, சுபவதனி, யுவஸ்ரீ, இனியா, பௌசியா உள்ளிட்ட எட்டு மாணவிகள் சர்.சி.வி.ராமன், தாமஸ் ஆல்வா எடிசன், மேரிகியூரி, ஆல்பட் ஐன்ஸைடன், சர் ஐசக் நியூட்டன், கலிலியோ கலிலி, டாக்டர் அப்துல் கலாம் ஆகியஏழு விஞ்ஞானிகள் குறித்தும் அவர்களது கண்டுபிடிப்புகள் குறித்தும் எல்லோரும் வியக்கும் வகையில் உரையாற்றி அனைத்து மாணவர் ஆசிரியர்களின் கரவொலியை பெற்றனர்.
துளிர் வினாடி வினா போட்டி துவக்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், விக்கிப்பீடியா எழுத்தாளரும், ஓய்வுபெற்ற கூடுதல் கருவூல அலுவலர் கி.மூர்த்தி ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கியும், சர்.சி.வி.ராமன் கண்டுபிடிப்புகள், அறிவியல் மனப்பான்மை குறித்தும் பேசினார்கள்.
வேலூர் கிளை இணைச்செயலாளர் பிரசாந்த், மாணவர்கள் ஆய்வுக்கான வழிகாட்டி ஆசிரியர் ஜெயந்தி , பள்ளி தமிழ் ஆசிரியர் கே.பாரதி, சமூகவியல் ஆசிரியர் புவனேஸ்வரி, ஆங்கிலப்பாட ஆசிரியர் டி.சாந்தி, உடற்கல்வி ஆசிரியர் ஹேமானந்தம் ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச்சான்றுகள் வழங்கி சிறப்பித்தனர்.2024 ஆம் ஆண்டு அறிவியல் செயல்பாடுகளை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் நடத்தியதற்காக அறிவியல் இயக்கம், வேலூர் வாசிப்பு இயக்கம் சார்பில் பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.விழா முடிவாக ஓவியம் மற்றும் கலை ஆசிரியர் செல்வகனேஷ் நன்றியுரை கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்களோடு, வேலூர் கிளை அறிவியல் இயக்க நிர்வாகிகள் சேகர், பூசாமி, சந்துரு, பீமாராவ் ஆகியோர் செய்திருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக