ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதகெபி திருத்தலத்தில்........ தவக்காலத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு திருப்பலி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதகெபி திருத்தலத்தில்........ தவக்காலத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு திருப்பலி.

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதகெபி திருத்தலத்தில்........ தவக்காலத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு திருப்பலி......... விவிலியத்தின் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு........ ..........

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் தவக்கால தொடக்கத்தின் முதல் வெள்ளியான இன்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு நம்பிக்கையின் பிறப்பிடமான இயேசுவின் திரு இருதயமே என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில் ஓராண்டிற்கான திரு விவிலியத்தின் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் பாராட்டி பரிசு வழங்கினார். 

இந்த சிறப்பு திருப்பலியில் அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகள் , மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி மற்றும் திருத்தல நிதி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad