வேலூர், மார்ச் 15 -
வேலூர் மாவட்டம் பயர்லைன் கஸ்பா பகுதியில் வசிக்கும் சந்திரகலா என்ற பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார், சந்திரகலா என்கின்ற பெண் அவரின் கணவன் மற்றும் மாமியார் மாமனார் கொடுமைப் படுத்துகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியதாவது எங்களுக்கு திருமணம் நடந்து சுமார் நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது, நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் ஆனால் எங்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். என் கணவரு டைய பெற்றோர்கள் எங்களை அவர்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால் என் கணவர் வேறு பெண்களிடம் தவறான உறவு மற்றும் குடிபோதையில் தொடர்ச்சியாக என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். இதைப் பற்றி எனது மாமியார் மாமனார் ஆகியோர் என்னை என் பிள்ளைக்கு உன்னை பிடிக்கவில்லை அதனால் என் பிள்ளைக்கு வேறு திருமணம் செய்து வைக்கிறோம் என் பிள்ளையை விட்டுவிட்டு உன் தாய் வீட்டுக்கு சென்று விடு என்று அடித்து என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என் மாமனார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் நபராக பணிபுரிவதால் காவல் துறையினர் என் உள்ளங்கையில் இருக்கின்றனர். நீ எங்கு புகார் கொடுத்தாலும் அந்த புகார் என்னிடம் வந்துவிடும் அதனால் என்னை ஒன்னும் செய்ய முடியாது என்று ஏக வசனத்தை பேசுகிறார் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு என்னை கொடுமைப்படுத்திய என் கணவர் மற்றும் என் மாமனார் மாமியார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன் என கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக