தாராபுரம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன் தலைமையில் நடந்தது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

தாராபுரம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன் தலைமையில் நடந்தது

IMG-20250324-WA0232(1)

தாராபுரம்,மார்ச்.24-

தாராபுரம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் குடிநீர் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், புதிய மோட்டார் பொறுத்துதல், மோட்டார் பழுதுபார்த்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக ரூபாய் 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்குதல்,கூடுதலாக அளவீடு செய்து சொத்துவரி விதிக்கப்பட்ட  நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்கு சரியான அளவு செய்து சொத்து வரி விதிக்க அனுமதி கோருதல்,சாக்கடை கால்வாய்களை தூர்வார  மினி ஜேசிபி இயந்திரங்களுக்கு அனுமதி கோருதல் உட்பட 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad