மோர் தானா அணையின் இடது பிரதான கால்வாய் தூர்வாரி புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

மோர் தானா அணையின் இடது பிரதான கால்வாய் தூர்வாரி புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா!

குடியாத்தம் அருகே மோர் தானா அணையின் இடது பிரதான கால்வாய் தூர்வாரி புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா
கே வி குப்பம் ,மார்ச் 10 -

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டத்தில் உள்ள மோர்தானா அணையின் இடது பிரதான கால்வாய் தூர்வாரி புனரமைக்கும் பணி மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கழகப் பொதுச் செயலாளர்  நீர் பாசனம் துறை அமைச்சர்  துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்
இதில் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி ஒன்றிய பெருந்தலைவர்கள் எல் ரவிச்சந்திரன் என்  இ சத்யானந்தம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad