குடியாத்தம் , மார்ச் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனை சுமார் 39 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது இந்தப் பணியில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இன்று பிற்பகல் குடியாத்தம் காத்தாடி குப்பம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் த / பெ சுப்பிரமணி (வயது 33 )என்பவர் குழியில் நின்று கொண்டு கம்பி கட்டும் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தார் திடீரென்று மண் சரிந்து குழியில் மாட்டிக் கொண்டார் உடன் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு வினோத்குமார் மீட்டனர் பிறகு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக