கோவையில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் வெளி மாவட்ட மாணவர்கள் தனியார் விடுதியில் தங்கி வருகிறார்கள். அவர்களுடைய நண்பர்கள் அல்லது அண்ணன்கள் என்ற ஒரு சிலர் வெளி மாவட்டத்தில் ஏதாவது கொலை குற்றம் தவறுகள் செய்து அந்த மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்தும் காவல்துறையிடம் சிக்கிடக் கூடாது என்ற நோக்கத்தில் உயிருக்கு பயந்து கோவைக்கு தப்பித்து வருகிறார்கள் .
கோவையில் கல்லூரிகளில் படித்து வரும் குற்றவாளிகள் உடைய நண்பர்கள் அல்லது தம்பிகளுடைய விடுதியில் தங்கி வருகிறார்கள்.
அவர்களுக்கு சோத்துக்கு வழியில்லை வெளியே சுற்றுவதற்கு பணம் இல்லை வேலைக்கு போவதற்கும் வக்கில்லை பெற்றோர்களும் தண்ணீர் தெளித்து விட்டார்கள் பணத்திற்காக என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு சில மாணவர்களை கொடுமைப்படுத்தி முக்கியமாக பிளாக் மெயில் செய்து வழிப்பறிப்போல் பணம், தொலைபேசி, இரு சக்கர வாகனங்களை வலுக்கட்டாயமாக பிடுங்கி வைத்துக் கொள்கிறார்களாம் .
இதை தட்டி கேட்டாலும் அல்லது காவல்துறை இடம் புகார் அளித்து விடுவோம் என்று சொன்னால் உங்களை வெட்டி விடுவேன் உங்களை கொன்று விடுவேன் என்று பலரையும் கொலை மிரட்டல் விடுகின்றார்கள்.
எனக்கு வந்த தகவல் படி கிட்டத்தட்ட 17 மாணவர்கள் கோவையில் ஒரு சில கல்லூரிகளில் படித்தார்களாம் அவர்களையும் இது போன்ற தொந்தரவுகள் கொடுமைகள் செய்தவுடன் அந்த 17 மாணவர்களும் அந்தந்த கல்லூரிகளில் இருந்து இங்கு இருந்தால் எனக்கு உயிருக்கு ஆபத்து என்று சொல்லி அவர்கள் படிப்பை அத்தோடு நிறுத்திவிட்டு அவர்களின் சொந்த மாவட்டத்துக்கு சென்று விட்டார்களாம்.
அதனால் காவல் துறையினர் அவர்கள் அழைத்து விசாரணை நடத்த வேண்டும்.
காவல்துறையினருக்கு அன்பான வேண்டுகோள் இவர்களைப் போன்ற சமூகவிரோதிகள் உயிருக்கு பயந்து வெளி மாவட்டத்தில் குற்றத்தை செய்து இங்கு தங்கி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்களைப் போல ஆட்கள் தான் இங்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வார்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது. அதனால் அவர்களை கண்டறிந்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேட்டுக் கொள்கிறார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் செய்தியாளர் கலைவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக