குடியாத்தம் அடுத்த உள்ளியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
குடியாத்தம் மார்ச் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சியில் வெயில் காலத்தில் பொது மக்களுக்கு தாகம் தணிக்க இளைஞர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர் மோர் தர்பூசணி பப்பாளி பழம் போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கினார் நிகழ்ச்சியில் இளைஞர் அணி தலைவர் மது தலைமை வகித்தார் துணைத் தலைவர் சக்திவேல் துணை செயலாளர் மணிகண்டன் மாணவரணி செயலாளர் சரத்குமார் இளைஞர் அணி துணைச் செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக உள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ராமதாஸ் பொதுமக்களுக்கு மோர் தர்பூசணி பழம் உள்ளிட்டவை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக