தவெக தலைவர் விஜயிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநில தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

தவெக தலைவர் விஜயிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநில தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம்.

IMG-20250310-WA0193

தவெக தலைவர் விஜயிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநில தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம்.


பத்திரிகையாளர்களை மதிக்காமல் செயல்படும், ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை, சீமான் ஆகியோரின் வரிசையில் விரைவில்  இடம்பெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் !பவுன்சர்களை வைத்து தமிழ் நியூஸ் 24 /7 செய்தியாளரை விரட்டியடித்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது !.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்றுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காத நிலையில், அவருடைய கட்சி நிகழ்வுகளில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், புறக்கனிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது !

தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சொல்லி, மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு கேட்டு பெறப்பட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வந்த நிலையில், இப்தார் நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்  விஜய்.

இதில் பத்திரிகையாளர்களுக்கு சரியான பாதுகாப்பு மற்றும் இட ஒதிக்கீடு போன்ற எதையுமே வழங்காமல், பவுன்சர்களை வைத்து விரட்டி அடிக்கும் செயலுக்கு கடுமையான கண்டனத்தை  தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர்  டி.எஸ்.ஆர்.சுபாஷ்  தெரிவித்து உள்ளார் !

மேலும் உரிய மரியாதை வழங்காத தலைவர்களையும், நிகழ்ச்சிகளையும் செய்தியாளர்கள் புறக்கனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad