மானாமதுரையை அடுத்த அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

மானாமதுரையை அடுத்த அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா

IMG-20250314-WA0169

மானாமதுரையை அடுத்த அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் அரிமண்டபம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர் திருமதி உமா ஆகியோரின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளின் ஆடல், பாடல், நடனம், நாடகம் மற்றும் கலை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்பள்ளி ஆண்டு விழாவின் இறுதியில் சிறப்பான முறையில் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆசிரிய பெருமக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கிராம பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad