மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 'டேலண்ட் டே' மற்றும் 'பட்டமளிப்பு விழா' நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 'டேலண்ட் டே' மற்றும் 'பட்டமளிப்பு விழா' நடைபெற்றது

IMG-20250322-WA0273

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 'டேலண்ட் டே' மற்றும் 'பட்டமளிப்பு விழா' நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியான பாபா மெட்ரிக் பள்ளியில் 46வது 'டேலண்ட் டே' மற்றும் 'பட்டமளிப்பு விழா' வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர் திருமதி பி. ராஜேஸ்வரி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இவ்விழாவில் பள்ளியின் திரு ஆர். தாளாளர் கபிலன், பள்ளி நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி மற்றும் பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு பட்டமளித்து, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பாபா கல்வி அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் பெருமக்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad