ஏரல், மார்ச் 25 தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6 வது கோவிலான பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் துவங்கி 11 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம் 5.30 மணிக்கு திருமஞ்சனம். நித்தியல். 7.மணிக்கு உற்சவர் மாயக்கூத்தன் தாயார் களுடன் கருட மண்டபத்தில் எழுந்தருளினார் 7.45 .00 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதி சுற்றி வந்தது. 8.40 மணிக்கு அர்ச்சகர் சுந்தர பட்டர் கொடி ஏற்றினார்
10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். அலங்காரம் செய்து தீபாராதனை, நாலாயிர திவ்ய பிரபந்தங்களை அரையர் சம்பத் ஸ்வாமிகள் அண்ணாவியார் பாலாஜி ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமிகள் ராமானுஜம் உட்பட பலர் சேவித்தனர்.
பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 7 மணிக்கு மாயக்கூத்த பெருமாள் பரங்கி நாற்காலி. சிம்ம. அனுமன். சேஷ. கருட. யானை. குதிரை. வெட்டி வேர் சப்பரம் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வீதி புறப்பாடு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் பாலாஜி ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர் ராமானுஜம். அறங்காவலர்கள் அஸ்வின் என்ற சோலைமலை, நாகராஜன்.உலகம்மாள் சுப்பிரமணியன்.பொன்சுந்தர்.நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 29 ந்தேதி கருடசேவை ஏப்ரல் 5 ந்தேதி தெப்பமும் 6 ந்தேதி புஷ்ஞ்சாலி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் குளந்தைவல்லி தாயார் கைங்கர்ய சபாவினர் செய்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக