குடியாத்தம் , மார்ச் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
இந்திய மாதர் சம்மேளனம் வேலூர் மாவட்டக்குழு சார்பில் குடியாத்தம் வளத்தூரில் சர்வதேச பெண்கள் தினம் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதற்கு கே.கல்பனா சந்தர் மாவட்ட பொருளாளர் ரசினாதப்ரேஸ்
குடியாத்தம் பொறுப்பாளர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.ஆனி ராஜா அகில இந்திய துணைத் தலைவர் எம்.கண்ணகி மாநில பொதுச் செயலாளர் ஜி.லதா.மு.ச.ம.உ. மாநில துணை தலைவர்.கருத்துரை வழங்கி னார்கள்.
சிறப்பு விருந்தினராக உட்கோட்ட நிர்வாக நீதிபதியும் கோட்டாட்சியருமான
மதிப்புமிகு செல்வி.சு.சுபலட்சுமி அவர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.
விழாவில் பங்கேற்க கோட்டாட்சியர் அவர்களுக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் அகில இந்திய துணைத்தலைவர் ஆனி ராஜா அவர்கள் விருது வழங்கி பாராட்டினார். சி.மலர் வேணிஒன்றிய குழு உறுப்பினர் குடியாத்தம் எஸ்.காவேரி வேலூர் மாவட்ட செயலாளர் எம்.வாசுகி மாவட்ட தலைவர்
ரீஹான நதீம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக