வேலூர் , மார்ச் 13 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் தி.மு.க தேர்தல் அறிக்கையில் உறதியளித்தபடி கோரிகக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்டத்தில் 13.03.2025 மாலை 5 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாநிலந்தழுவிய மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு. மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை அமைப்பாளர்கள் ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்கல்வி அலுவலர் கோபால இராசேந்திரன், ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.சுப்பிரமணி, வேதக்கண் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
முன்னதாக செயற்குழு உறுப்பினர் சேட்டு வரவேற்று பேசுகின்றனர்.
வாழ்த்துரை ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எ.அப்துல்ரஹீம், தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம், ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பி.லோகநாதன் அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எ. கதீர் அகமது ஜோக்டோ மாவட்ட செய்தித்தொடர்பாளர் வாரா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
செயற்குழு உறுப்பினர்கள் என்.இளங்கோவன், எஸ்.சச்சிதானந்தம், ஜி.ராஜேந்திரன், ஆறுமுகம், ஜி.விநாயகம், டி.சாந்தி, காஞ்சிநாதன், வி.பாலச்சந்தர் ஆகியோர் பேசினர்.
காட்பாடி கிளை அமைப்பாளர் ஜி.சோமசுந்தரம் நன்றி கூறினார்.
கோரிக்கைகள்
1. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 70 வயது துவக்கத்திலேயே ஓய்வூதியத் தொகையினை பத்து சதவிகிதம் உயர்த்தி வழங்க கோரியும்
2. நீதிமன்ற தீர்ப்பின் படி 80 வயது ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 20 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட கோரி
3. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழு மருத்துவச்செலவையும் அரசே ஏற்க வேண்டும்
4. தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டும்.
5. ஓய்வூதிய பறிமாற்ற தொகை (கம்யூடேசன்) பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக குறைத்திடுக
6. மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரயில் கட்டண சலுகையை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்
7. 1980 முல் 1985 வரை பயி நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கியது போன்று உயர் துவக்க ஊதியம் ரூ.14940ஐ 27.07.1998 முதல் தமிழக அரசு உடன் வழங்க வேண்டும்
8. ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை 2018 ஜுன் 9 அன்று வெளியிட்டுள்ள ஒத்திசைவு அட்டவனை அடிப்படையில் தமிழகத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கம் திருத்திய ஓய்வூதியத்தை 01.01.2016 முதல் வழங்க வேண்டும்
9. 31.05.2009க்கு முன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவியில் தர ஊதியம் 5400 பெற்றவர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களபதவி உயவு பெற்றும் பணி மாறுதல் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்களாக சென்றவர்களுக்கு அரசாணை 19 நாள் 07.12.2019ன்படி ஊதியக்குறைப்பு செய்யாமல் ரூ.5400 தர ஊதியம் நிலையிலேயே ஊதியம் அனுமதிக்க திருத்த ஆணை வழங்க வேண்டும்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக