பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி!
ராணிப்பேட்டை , மார்ச் 30-
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அனிதா நாராயணன் தலைமை தாங்கினார், ஒன்றியக்குழுஉறுப்பினர் மனோகரன், து.தலைவர் கிரிஜா,மு.உ.தொ.கல்வி அலுவலர்உத்தமன், RtdHMஹரிஹரன், முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் விநாயகம் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கல்விப் புரவலர்கள், முன்னாள் மாணவர்கள், SMCஉறுப் பினர்கள்,பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பிள்ளைகளின் கலை நிகழ்சிகளை கண்டுகளித்தனர். ஏற்கனவே உள்ள 155புரவலர்களுடன் புதிதாக 5 புரவலர்கள் இணைந்தனர். ஆசிரியைகள் மலர்விழி ஐடா ஞானம் சியாமளா,அகிலா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர் SMC தலைவர் மணிமேகலை லிங்கநாதன், PTC பார்த்திபன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக