ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்!
ராணிப்பேட்டை மார்ச்28 - ராணிப்பேட்டை மாவட்டம் வாரச்சந்தையில்,ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனைஅமோகமாக நடைபெற்றுள்ளது வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில், ரூ. 3 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
ராணிப்பேட்டை வாரச்சந்தை, ராணிப் பேட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படுகிறது, இங்கு வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமிய சமூகத்தி னர் ஆடுகள் வாங்க ராணிப்பேட்டை வாரச்சந்தையில் குவிந்துள்ளனர், இதனால் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகையை முன்னிட்டு ராணிப் பேட்டை வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக