கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் நெலாக்கோட்டை காவல் நிலையம் ஆகியன சார்பில் இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் புளேராகுளோரி தலைமை தாங்கினார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மார்கிரேட்மேரி முன்னிலை வகித்தார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் மணிவாசகம் நிகழ்வின் அவசியம் மற்றும் நோக்கம் குறித்து விளக்கம் அளித்தார். நெலாக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் சக்தி, காவலர்கள் ஜெயராஜ், ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இணைய வழியில் எவ்வாறான குற்றங்கள் நடைப்பெறுகிறது. எவ்வாறு விழிப்போடு செயல்படுவது நவீன தொழில் நுட்பங்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது குறித்து விளக்கமளித்தனர். இறுதியில் சைபர் குற்றங்கள் சார்பாக 1930 எண்ணின் பயன்பாடு மற்றும் QR code களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் நிஷாத், நிரோஷா , மேகலா மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக