கோவில் ஊர்வலத்துக்கு யானை அனுமதி இல்லாததால் குதிரை வண்டியில் சந்தன குடம் பவனி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பக்தர்கள் யானை மீது சந்தனம் மற்றும் களபம் பவனி கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்ட கோயிலுக்கு சந்தன கூட பவனி வரும் யானைகளின் உரிமம் கடந்த இரண்டு வருடமாக வனத்துறையிடமிருந்து புதுப்பிக்கப்படவில்லை என கூறி, யானை பவனிக்கு அனுமதி அளிக்கவில்லை.
மண்டைக்காடு கொத்தனார் விளை முத்து சிவன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் குதிரை மீது சந்தனக்கூடம் கொண்டு வந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட திருவட்டார் தாலுகா செய்தியாளர்,
அஸ்வின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக