இலங்கை வாழ் தமிழர் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தி டிஜிட்டல் முறையில் விவரங்களை UPDATE செய்யப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல்வேறு தாலுகாக்களில் இலங்கை அகதிகள் முகாம் பகுதிகளில் தொடர்ந்து பதிவை புதுப்பிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது,
அதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு வார காலமாக 01.03.25 முதல் 09.03.25 வரை கோபாலசமுத்திரம் மற்றும் கங்கைகொண்டான் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் அரசு சார்பில் நடைபெற்றது. இந்த முகாமில் நாட்டாமை மற்றும் இலங்கை அகதிகள் முகாமை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டு இதில் பயன் பெற்றனர்
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக