நீலகிரி மாவட்ட உதகை நகர தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு உதகை நகர தி.மு.க., சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் அருகில் நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது மாவட்ட பொறுப்பாளர் ராஜூ முன்னிலை வகித்தார் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில பொறியாளர்அணி துணை செயலாளர் பரமேஸ்குமார், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, நகர நிர்வாகிகள் ஜெயகோபி, கிருஷ்ணன், அணில்குமார், தம்பி இஸ்மாயில், கார்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை திமுக பேச்சாளர் கந்திலி கரிகாலன் ஆகியோர் சிறப்புரையாற்றி - நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினோம்.
கூட்டத்தில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ரஹைமத்துல்லா, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ரமேஷ், கீதா, நாகமணி, கஜேந்திரன், ரகுபதி, கன்னியப்பன், மார்கெட் ரவி, அமலநாதன், ஜெகதீஸ், விஜயகுமார், தியாகு, ஆட்டோ ராஜன், ஆட்டோ பாபு, தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் விஷ்னு, செல்வராஜ், பிரியா, மீனா, திவ்யா, மேரி பிளோரீனா, அனிதா லட்சுமி உட்பட கழக நிர்வாகிகள், திமுக கிளை நிர்வாகிகள், திமுக செயல்வீரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் திமுக ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு செய்த பல நலத்திட்ட சாதனைகளை கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர் கூட்ட முடிவில் நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக