சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை உரையாற்றி மாணவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கஸ்தூரிபாய் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் பவர் மீடியா நெட்வொர்க் தலைவருமான முனைவர் ஜெகன், பெண்களுக்கு உரிமைகள் தானாக கிடைத்துவிடவில்லை என்றும் போராடித் தான் பெண்ணுரிமைகள் கிடைக்கப்பெற்றன என்றும், இன்று சமூகத்தில் நடைபெறும் ஐந்து வகையான பெண்களுக்கு எதிரான குற்றங்களான குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, பெண் சிசுக்கொலை, பணியிடங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான அநீதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகியவற்றைப் பற்றி விளக்கி கூறியதோடு பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு இயற்றி வரும் சிறப்பான நடவடிக்கைகள் குறித்தும், புதிய சட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறினார். மேலும் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார். பள்ளத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற மருத்துவர் தாமரை வாழ்த்துரை வழங்கினார். விழாவில் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோஃபர் பேகம் மாணவிகள் காளிமுத்து, கயல்விழி, கிருத்திகா ,அன்னபூரணி ஆகியோருக்கு சிங்கப் பெண் விருது வழங்கப்பட்டன. இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கவிதா நன்றி கூறினார் இவ்விழாவில் பேராசிரியர்களும், ஆசிரியரல்லாப் பணியாளர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் கஸ்தூரிபாய் மற்றும் பேராசிரியர்கள் கவிதா, ஜானகி ஆகியோர் செய்திருந்தனர். முனைவர் பாரதிராணி விழாவினைத் தொகுத்து வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக