கோடைகால வெயில் தணிக்க அஇஅதிமுக நகர கழக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
ராணிப்பேட்டை, மார்ச் 27 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகாமையில் அஇஅதிமுக நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜிம். எம். சங்கர் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். எம். சுகுமார் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து சிறப்பித்தார்.இதில் தண்ணீர், மோர், இளநீர், பழ வகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப் பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், ஆஇஅதிமுக கழக நிர்வாகிகள் ராதிகா, மற்றும் தண்டபாணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே. சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக