நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பது தொடர்ந்து இந்திய அரசு நேரு யுவகேந்திரா மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஐடிஐ குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தேயிலை வாரிய மேம்பாட்டு அலுவலர் அஞ்சலி பேசும்போது இந்தியாவை பொறுத்தவரை மாதம் சுமார் 1300 மில்லியன் கிலோ தேயிலை தூள் உற்பத்தி ஆகிறது.
அதில் 1100 மில்லியன் கிலோ அளவு இந்தியாவில் பயன்படுத்துகின்றனர் 200 மில்லியன் கிலோ தான் வெளிநாடுகளுக்கு செல்கிறது. தேயிலை ஆங்கிலேயர் காலத்தில் பணக்காரர்கள் பணமாக இருந்தது. தேயிலை உற்பத்தி அதிகரித்த நிலையில் அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைத்தது. தேயிலையில் உள்ள ஆண்டி ஆகிஸிடன்ட் மற்றும் பலிபினால்கள் உடலில் தேவையில்லாதவற்றை அழித்து, உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
அதுபோல தேயிலையில் கலர் சாயம் சேர்க்கப்படுகிறது. இவற்றில் உள்ள கசினோ ஜெனிக் போன்ற இரசாயனங்கள் புற்றுநோய்யை உருவாக்கும் கலப்படத்தால் தேயிலைக்கு கூடுதல் விலை கிடைக்காது.
கலப்படம் தேயிலை குறித்து அறிந்தால் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நிலையான நீடித்த நுகர்வு என்கிற அடிப்படையில் இந்தாண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த படுகிறது. நாம் நீடித்த பயன்பாடு இல்லாத பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் பொருட் செலவுகளும், குப்பைகள் அதிகரிக்கும் தன்மையும், சேமிப்பு பழக்கம் இன்மையும் ஏற்படுகிறது. எனவே நீடித்த உழைப்பு திறன் கொண்ட பொருட்களை வாங்குதல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பொருட்களை தவிர்த்தல் அவசியம். என்றார்.
நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் பேசும்போது நேரு யுவகேந்திரா மூலம் இளையோர்களுக்கு பல நல்ல திட்டங்கள் செயல்படுத்த பட்டு வருகிறது. இளைஞர்கள் நல்ல நுகர்வோர்களாக இருக்க வேண்டும். சமுதாய மாற்றத்தில் தங்களின் பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சரஸ் அறக்கட்டளை வசந்தகுமாரி, நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வளர் கூட்டமைப்பின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஹேமலதா, தொழிற்பயிற்சி மைய ஆசிரியர்கள் ராஜா, அரவிந்த்குமார், அம்மிணி, பெஞ்சமின், நாகேந்திரன், நிதிஷ்குமார், ஜான் சாலமன் சஞ்சீவி ராஜ், மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக