சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.

 

IMG-20250313-WA0015(1)

சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.


சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம், சிவகங்கை மாவட்டம் வேளாண்மை பொறியியல் துறை வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் 2024-25ன் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் சிவகங்கை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை (ம) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற "சமுதாய வளைகாப்பு விழா" நிகழ்வில் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கான அறிவுரைகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி,  திருப்புவனம் பேரூராட்சி தலைவர் த. சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ். பிரவீன் குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்து மாரியப்பன், திருப்பத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் கான் முகமது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ரதிபிரியா, சிவகங்கை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துராமலிங்கம், அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad