தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் விளக்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் விளக்கம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் விஜய்யை வரவேற்று, பனையூர் கட்சி அலுவலகத்தில் இருந்து பொதுக் குழு நடைபெறும் திருவான்மியூர் மண்டபம் வரை போஸ்டர்களும் பேனர்களும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன.

தவெகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "தளபதி அவர்களை பொதுக் குழுவுக்கு அழைத்துவரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசான், தவெக பொதுச் செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சரை வருக வருக என வரவேற்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பொதுச் செயலாளர் ஆனந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி அவர் தெரிவித்ததாவது:

"வேண்டுமென்றே சில விஷமிகள் செய்த செயல். வருகின்ற 2026 இல் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக விஜய் வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் கோடான கோடி தொண்டர்களில் ஒருவன். இதுபோன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்" எனக் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad