திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் திமுக இளைஞர் அணி சார்பாக மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்தில் தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசான பா.ஜா.க.வை கண்டித்து திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விமல் வரேவேற்ப்புரை ஆற்றினார்.இதில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஆட்சி காலத்தில் இருந்து இந்தி எதிர்ப்புப் பிரச்சனை இருந்து வருகிறது.அதன்பிறகு மறைந்த கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்த போதும் இந்தி எதிர்ப்புப் இருந்து என்றைக்கும் திராவிட அரசு மும்மொழி கொள்கைக்கு துணை போகாது தமிழ் என்றும் அழியாது என்று கூறினார். மேலும் பாஜக அரசு எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை கொண்டு வர முடியாது.அதை ஒரு காலமும் திமுக அரசு ஏற்க்காது என்று கூறினார்.மத்திய அரசு அநீதிகளை அழித்து வரும் பா.ஜா.கா.வை எதிர்த்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி வருகிறார்.2000 கோடி நிதி ஒதுக்கீட்டை தடுத்தாலும் அதை தாண்டி சாதிக்க முடியும் என்று சவால் விட்டு சந்தித்து வருகிறார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராமலிங்கம்,லதாஅதியமான், மாவட்ட கழக நிர்வாகிகள் நாகராஜ், பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், தனபாண்டியன், திருமங்கலம் தொகுதி பொறுப்பாளர் அலாதீன், திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவிற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக