திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்த விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்த விழா.

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்த விழா. 

ஆழ்வார்திருநகரி, மார்ச் 12. நவதிருப்பதகளில் 8 வது திருப்பதியான திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி அன்று கு பேரனுக்கு நிநி கொடுத்தநாளாகும். 

கைலாயத்தில் பார்வதி பரமசிவன் தரிசனத்திற்கு சென்ற குபேரன் பார்வதி தேவியை சபலத்தால் நோக்கியதின் காரணமாக பார்வதி சாபத்தால் குபேரன் நவநிதிகளையும் இழந்தார். பின்னர் பெருமாள் கட்டளையின்படி திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கைங்கர்யம் செய்து பெருமாளிடம் இழந்த நிதி கேட்டார். 

அதனை மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி அன்று பெருமாள் கொடுத்தார். அதன் நிகழ்வாக நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நித்தியல் முடிந்து உற்சவர் வைத்தமாநிதி பெருமாள் தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

பக்தர்கள் அனைவரும் மூலவர் நிச்சயே பவித்திரர் தரிசனம் செய்து நிதியை கொடுத்து பெருமாள் பாதாத்திலும் அளந்து கொடுத்த மரக்காலிலும் வைத்தால் நிதி பெருகும் என பக்தியுடன் வைத்து பெற்று சென்றார்கள். 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் பாலாஜி. சுதர்சன். சீனிவாசன். ஸ்ரீதர். ரகு. ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி. செயல் அதிகாரி சதீஷ். அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் (எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன். செந்தில் குமார். காளிமுத்து. ராம லட்சுமி. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad