கோடை காலம் மலை ரயிலின் சேவை: - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

கோடை காலம் மலை ரயிலின் சேவை:

 

IMG-20250327-WA0584

கோடை காலம் மலை ரயிலின் சேவை: வந்தாச்சில்ல, அதான் ஊட்டி - குன்னூர் இடையே ஒரு சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவிச்சிருக்கு. 


இது மார்ச் 28 ஆரம்பிச்சு ஜூலை 7 வரைக்கும் நடக்கும். 


எப்போ இயக்குவாங்கன்னா? வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் - இந்த நாலு நாளும் ரயில் ரெடியா இருக்கும்!


காலை 8:20 மணிக்கு குன்னூர்ல இருந்து ஸ்டார்ட் ஆகி, 9:40 மணிக்கு ஊட்டியை போய்டும். திரும்ப வரும்போது, மாலை 4:45 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்பட்டு, 5:55 மணிக்கு குன்னூருக்கு வந்துவிடும்


ஊட்டி - குன்னூர் ரயில் பயணம்: மலைப் பகுதியின் மந்திர மயமான அனுபவம்! 


 உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் சேவை

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சொத்து குன்னூர் - ஊட்டி இடையே இயற்கையின் அழகை ரசிக்கும் ஒரு மெய்சிலிர்க்கும் பயணம்


 குன்னூரில் தொடங்கி, நீலகிரி மலைப்பகுதிகளின் வழியாக ஊட்டியை அடையும் இந்த ரயில் பயணம், மழைக்காடு, மலைச்சரிவுகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை நிறைந்த தேயிலை தோட்டங்கள் ஆகியவற்றின் அழகை கண்டுகளிக்க ஒரு சிறந்த வாய்ப்பு!


 ரயிலின் சிறப்புகள்:


பழமை மிக்க நீராவி எஞ்சின்

மலைப்பாதை வழியாக பயணிக்கும் சிறப்பு தண்டவாள அமைப்பு

உயர்நிலை ரயில் நிலையங்கள் – குன்னூர், லவ்டேல், வெலிங்டன்

தனிப்பட்ட வண்ணம் கொண்ட சிறிய ரயில் பெட்டிகள், புகழ்பெற்ற ஹேர்பின் டர்ன்


பயணத்தின்போது நீங்கள் காணும் ஏராளமான புகைப்படக் காட்சிகள் உங்கள் மனதில் நீண்ட | பதிந்து போகும்!


 ஒரு நாள் சுற்றுலாவிற்கும், நினைவாக்கொள்ளும் அனுபவத்திற்கும் சிறந்த தேர்வு – ஊட்டி-குன்னூர் ரயில்


மொத்தத்திலே கோடைல ஊட்டி போறவங்களுக்கு இது ஒரு கூலான அனுபவமா இருக்கும் - மலை, பசுமை, காற்று, ரயில் பயணம்... சூப்பர்ல தெற்கு ரயில்வே இப்படி ஒரு ஐடியா பண்ணி சுற்றுலாப் பயணிகளை குஷிப்படுத்துது! 


போய்ட்டு எப்படி இருந்துச்சுனு சொல்ல மறந்துடாதீங்க!. தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad