குடியாத்தம் ,மார்ச் 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்
நகராட்சி ஆணையாளர் மங்கையர்க் கரசன் முன்னிலை வகித்தார் நேர்முக உதவியாளர் நெடுமாறன் வரவேற்றார்
கூட்டத்தில் தரணம்பேட்டை தினசரி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டது இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் மேற்படி இடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளி கூட்ரோடு பகுதியில் பகுதியில் உள்ள புற காவல் நிலையம் மறைவான இடத்தில் உள்ளது அதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் மாதனூர் பாலாற்றில் கோழி கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் கொத்த குப்பம் பகுதியில் மணல் திருட்டு அதிக அளவில் நடை பெறுகிறது தடை செய்ய வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வாதித்தனர் மேலும் இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார் பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோபி தனி வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் யஸ்வந்தர் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் சம்பத்து நாயுடு துரை செல்வம் பழனிவேல் தலித் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் விவசாயிகள் கோரிக்கைகளை விரைவில் நிவர்த்தி செய்வதாக வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக