பேராவூரணியில் பிஜேபி யினர் சாலை மறியல் போராட்டம்.
பேராவூரணி மார்ச் - 17 டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதனை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மார்ச் 17 இல் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையம் முகப்பு வாயிலில் பாஜகவினர் மாநில விவசாய அணி துணைத்தலைவர் பண்ணவயல் இளங்கோ தலைமையிலும் பாஜக மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் மாவட்ட பொதுச் செயலாளர் வீரா மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் ஊழல் முறைகளை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாநில தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கைது செய்ததை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் வெளியே செல்ல முடியாமலும் பேருந்து நிலையத்திற்கு வாகனம் செல்ல முடியாமலும் அறந்தாங்கி முதன்மை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதையடுத்து போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்
பேராவூரணி த.நீலகண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக