மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற் கூடம் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற் கூடம் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற் கூடம் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம், மார்ச் 22 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம், உள்ளி ஊராட்சி அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற்கூடம் வேண்டாம் இது மது அருந்தும் கூடாரமாக மாறி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சி, உள்ளி என்ற கிராமப் பகுதி அருகே டாஸ்மாக் கடை அருகில் நிழற்கூடம் கட்டும் பணி தொடங்கிய நிலையில், அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். உள்ளி ஊராட்சியில் குடியாத்தம் மாதனூர் ஆம்பூர் வரை பேருந்து சென்று வருகிறது. இந்த நிலையில் உள்ளி சுற்றியுள்ள கிராமங் களில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இவ்வழியாக வருவதால் அந்த பகுதியில் பயணிகள் நிற்க நிழற்கூடம் இல்லாததால் புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். இதனை ஏற்று வேலூர் எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் உள்ளி ஊராட்சியிலுள்ள ஆத்தோரம்பட்டி பகுதியில் பயணிகள் நிழற்கூடம் கட்ட இடவசதி இல்லாததால் உள்ளி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள இடத்தில் நிழற்கூடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கட்டுமான பணி 22-03-2025 சனிக்கிழமை காலை நடந்தது. அப்போது திடீரென அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து இந்த இடத்தில்நிழற்கூடம் வேண்டாம் என சொல்லியும் மறுபடியும் கட்டுரீங்களா என அப்பகுதி மக்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி விட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில் உள்ளி ரயில்வே மேம்பாலம் அருகே பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்காக பணிகள் நடப்பதை அறிந்து  இப்போது கட்டப்பட உள்ள இடத்திலிருந்து 50 அடி தொலைவிலேயே அரசு மதுபான டாஸ்மார்க் சாராயக் கடை இயங்கி வருகிறது இந்த இடத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டினால் பயணிகள் யாரும் நிற்க முடியாத நிலை ஏற்படும் குறிப்பாக பெண்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் பயணிகள் நிழற்கூடத்தை மதுப் பிரியர்கள் ஆக்கிரமித்து டாஸ்மாக் சாராயம் குடிக்கும் பாராக பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும், பணியை டெண்டர் எடுத்தவரும் ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் நிழற்கூடத்தை கட்டுங்கள் என பெண்கள் பொதுமக்கள் கூறினார்கள் ஆனால் டெண்டர்  எடுத்தவர் இல்லை இங்கதான் கட்ட சொன்னார்கள் என்று கூறினார் இதனை அடுத்து மகளிர்கள் ஒன்று சேர்ந்து குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் அவரிடம் தொலைபேசியில் பேசிய பெண்கள் உள்ளி ரயில்வே மேம்பாலம் அருகே  நிழற் கூடம் பயணிகள் கட்டிடம் எங்களுக்கு வேண்டாம் ஏனென்றால் அருகே மதுபான டாஸ்மார்க் கடை உள்ளது குடிமகன்கள் இந்த நிழற் கூடத்தில் மது அருந்திவிட்டு எங்களுக்கு அதிகமாக தொல்லை கொடுப்பார்கள் ஆகியால் இந்த இடத்தை இங்கு கட்டுவதை  தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என தகவல் தெரிவித்தனர். அப்போது எம்.எல்.ஏ. அவர்கள் நீங்கள் எதுவும் செய்யாதீர்கள் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சிறிது நேரத்தில் அந்த இடத்தில் கட்டுமானம் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad