திருப்பத்தூர் , மார்ச் 14 -
திருப்பத்தூர் மாவட்டம் ஊராட்சி பகுதிகளில் தொழிற்சாலை அமைப்பதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசினால், அரசாணை(நிலை) எண்.170, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி(பரா.2) துறை, நாள்.12.11.2024-இன்படி விதிகள் வகுத்து வழங்கப்பட்டுள்ளது.ஊரகப் பகுதிகளில் தொழிற்சாலை உரிமையாளர்/பங்குதார்கள் தொழிற்சாலை அனுமதி பெறுவதற்கு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள். தனி நபர் குறித்த ஆவணங்கள்.
1. ஓட்டுநர் உரிமம்,
2. வங்கி கணக்கு புத்தகம்,
3. வாக்காளர் அடையாள அட்டை,
4.ஆதார் கார்டு,
5. கடவுசீட்டு,
6.பான் கார்டு(PAN) ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன் படிவம் 1-ல் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தொழிற்சாலை குறித்த ஆவணங்கள்,
1.சொத்து வரி ரசீது,
2.நில உடமை பத்திரம்/பட்டா/வாடகை ஒப்பந்தம் போன்ற நில உடமை ஆவணங்கள்,
3.தொழிற்சாலை அமைத்தல் குறித்த பொறியாளர் வரைபடம்,
4.இயந்திரங்களின் மின் திறன் குறித்த அறிகை ஆகிய ஆவணங்களுடன் படிவம் 1-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கட்டிட விதிகளை பின்பற்றி தொழிற்சாலை அமைக்க நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநரால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்ட வேண்டும். விற்பனை மற்றும் சேவை வரி, வணிக வரித் துறையின் மூலம் வழங்கப்படும் GST எண் விவரங்கள் இணைக்க வேண்டும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலையில் கருவிகள்/இயந்திரங்கள் வைத்திருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விவரங்களுடன் உறுதிமொழிப்பத்திரம் படிவம் 2-இல் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்
க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக