திருப்பூர் காங்கேயம் சாலை அருகில் பெரும் பள்ளமான சாலை மக்கள் அவதிப்படுகிறார்கள் இது பற்றி எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் கூறியதாவது திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு
உஷாதியேட்டர் சிக்னலில் இருந்து CTCகார்னர் வரை செல்லும் சாலையின் இடது பக்கம் செல்லப்புரம் அரசு பள்ளி உள்ளது, வலது பக்கம் சுந்தரம் மகப்பேறு மருத்துவமனை உள்ளது.
மேலும் தினமும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களும்,
பள்ளி குழந்தைகளும் கடந்து செல்லும் சாலையின் நடுவில் மாநகராட்சி பணிகளுக்காக பல மாதங்களாக தோண்டப்பட்ட பெரிய குழி மூடப்படாமல் இருக்கிறது..
அந்த பெரிய குழியின் வழியாக தண்ணிர் குழாய் உடடைந்து வீணாக ரோடு முழுவதும் வழிந்தோடுகிறது.
மேலும் இந்த மரண குழியால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமாக விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள்..
தொடர்ச்சியாக SDPI கட்சியும், பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை.
திருப்பூர் மாநகராட்சியின் இந்த அலட்சிய போக்கை
SDPI கட்சி வன்மையாக கண்டிக்கிறது இந்நிலையில் எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் 28/02/2025 வெள்ளிகிழமை மாலை 6.00 மணிக்கு அந்த குழியை நேரில் பார்வையிட்டனர்.
வரும் 02/03/2025 ஞாயிற்று கிழமைக்குள் மாநகராட்சி நிர்வாகத்தால்
இந்த சாலை சரி செய்யப்பட வேண்டும்.
சரி செய்யவில்லை
என்றால்
திங்கள் கிழமை
(03-02-2025)
காலை சரியாக 10.30 மணியளவில்
எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக பொதுமக்களை திரட்டி மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று
மாநகராட்சி அதிகாரிகளுக்கு சொல்லிக்கொள்ளகிறோம். இவ்வாறு எஸ்டிபிஐ கட்சியினர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக