ஆறுமுகநேரி காவல்துறைக்கு - மக்கள் பாராட்டு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

ஆறுமுகநேரி காவல்துறைக்கு - மக்கள் பாராட்டு

ஆறுமுகநேரி காவல்துறைக்கு - மக்கள் பாராட்டு

வரலாறு காணாத பெரும் வெள்ளத்திற்கு பிறகு ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் சேதமடைந்து ராட்சத பள்ளங்களாக உருவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 

இதை சரி செய்ய ஆறுமுகநேரி பகுதி சாலையில், ஆறுமுகநேரி காவல் துறை சார்பில் சாலையில் காணப்பட்ட ராட்சத பள்ளங்களை கட்டிடக்கழிவுகளை கொட்டி தற்காலிகமாக நிரப்பி சரி செய்தனர். 

நெடுஞ்சாலை துறை செய்ய வேண்டிய பணிகளை, காவல் துறை செய்ததால், சீரமைத்த காவல் துறையினருக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad