ஆளுகிற கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு உழைக்கிற கட்சி அதிமுக - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

ஆளுகிற கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு உழைக்கிற கட்சி அதிமுக

 

IMG_20250331_184553_204

ஆளுகிற கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு உழைக்கிற கட்சி அதிமுக

டெல்லிக்கு செல்லும்போது இரு மொழிக் கொள்கை 100 நாள் வேலை திட்டத்தில் பணம் வாங்கித் தாருங்கள் எனக் கூறுகிறீர்கள் உங்களுக்கு செய்ய முடியவில்லை என்றால் எதற்கு முதலமைச்சர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்து விட்டுப் போங்கள்.

காவிரி பிரச்சனை வருகிற போது நாடாளுமன்றத்தை 22 நாட்கள் காவேரி உரிமையை நிலை நிறுத்துவதற்காக போராடிய கட்சி அதிமுக 50 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கண்டது.
புரட்சித்தலைவி அம்மா காவிரி உயிர் கொடுப்பதற்காக தன் உயிரை பணயம் வைத்து 84 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவர்
ஆனால் முதலமைச்சர் பேண்ட் சர்ட் போட்டுக்கொண்டு ஃபோட்டோ ஷூட் நடத்துகிறார்.

டாஸ்மார்க் முறைகேடு வரியே இல்லாமல் ஒரு லட்சம் பாட்டில் கூட்டி கழித்து பார்த்தால் ஆயிரம் கோடியில் இருந்து 40 ஆயிரம் கோடியாக உள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.

மதுரை மாவட்டம்
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்ராம்பட்டி கிராமத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று அம்மா அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களிடம்  நேரில் வழங்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் திருமங்கலம் தொகுதி கட்ராம்பட்டி கிராமத்தில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் தமிழழகன் தலைமை வகித்தார். திண்ணை பிரச்சாரத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நடுவக்கோட்டை பகுதியில் வீதி,வீதியாகச் சென்று பொது மக்களை நேரில் சந்தித்து கழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை நேரில் வழங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் திமுகவை வீழ்த்தி மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திடும் வகையில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு சிறப்புரையாற்றினார்
முன்னதாக திண்ணை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும்  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  அசைவ அன்னதானத்தை தொடங்கி வைத்து வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றியதாவது.

ஆளுகிற கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக உழைக்கிற கட்சி அதிமுக என்பதை புரட்சிதமிழர் எடப்பாடியார் நிரூபித்து காட்டியிருக்கிறார் சட்டமன்றத்தில் முதலமைச்சர் கூறுகிறார் டெல்லிக்கு செல்லும்போது இரு மொழி கொள்கை 100 நாள் வேலை திட்டத்தில் பணம் வாங்கித் தாருங்கள் எனக் கூறுகிறீர்களே அதை எடப்பாடி யார் பக்குவமாக செய்வார் அவர் செய்வது மக்களுக்காக உங்களால் செய்ய முடியவில்லை என்றால் உங்களுக்கு எதற்கு முதலமைச்சர் பதவி நீங்கள் ராஜினாமா செய்து விட்டுப் போங்கள் மக்களுக்காக 100 நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பார் இல்லை என்றால் தமிழ்நாட்டு நிதியில் மக்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுவார் டெல்லிக்கு சென்று அங்குள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட வேண்டும் அங்கு பக்கோடா சாப்பிட்டுவிட்டு இங்கே வந்து போராடலாம் எனக் கூறுகிறார்கள்.

காவிரி பிரச்சனை வருகிற போது நாடாளுமன்றத்தை 22 நாட்கள் காவிரி உரிமையை நிலை நிறுத்துவதற்காக போராடிய கட்சி அதிமுக 50 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கண்டது பாரதிய ஜனதா கட்சியோடு
கூட்டணியில் இருக்கும் போது 22 நாட்கள் நாடாளுமன்றம் நடக்கவில்லை எங்கள் பிறப்புரிமை காவேரி உரிமை
புரட்சித்தலைவி  அம்மா அவர்கள் காவேரியில்  உயிர் கொடுப்பதற்காக தன் உயிரை பணயம் வைத்து 84 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த புரட்சித்தலைவி அம்மாவுடைய வழித் தொண்டன் எடப்பாடி யார் காவேரிக்கு உயிர் கொடுப்பதற்காக
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின்
பேண்ட் சர்ட் போட்டுக்கொண்டு ஃபோட்டோசூட் நடத்துகிறார் போங்க டெல்லிக்கு ஆறு மாதம் சம்பளம் கொடுத்து வக்கத்த அரசு அப்பாவிற்கு கடலில் பேனா வைப்பதற்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை இங்கே கொடுக்க வேண்டியதுதானே இதெல்லாம் ஏமாற்று வேலை கடன் உச்சபட்சத்தில் போய்விட்டது குறுக்கு வழியில் கையாளுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad